கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதிய ஓட்டுனர் உரிமம் வழங்கும் பணிகள் மட்டும் நாளை நடைபெறும்
பொதுமக்கள் பயன்பெறலாம்.
கும்பகோணம் வட்டார போக்குவரத்து நடத்துனர் உரிமம் வழங்கும் பணிகள் மட்டும் மேற்கொள்ள இருப்பதாக வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) கவிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் தொடர்பான பொதுமக்களின் ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் உத்தரவின்பேரில், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் மற்றும் தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அதிகாரியின் அறிவுரையின்படி பொதுமக்களின் வசதிக்காக
கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நாளை (ஜூன் 10 ந் தேதி) புதிய ஓட்டுனர் உரிமம் வழங்கும் பணிகள் மட்டும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு பயனடையுமாறு அறிவுறுத் தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.