உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.
உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் “தமிழ்ப் புதல்வன் திட்டம்” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோயம்புத்தூரிலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து குடவாசல் வட்டம் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ,திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் 500 மாணவர்களுக்கு “தமிழ்ப் புதல்வன் திட்டம்” கீழ் ரூ.1000 பெறுவதற்கான பற்று அட்டை, (ஏடிஎம் அட்டை), உயர்கல்வி வழிகாட்டு கையேட்டினை வழங்கினார்கள்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார். மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.