பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பாரதிதாசன் தெரு ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ வீர சாம்பசிவமூர்த்தி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய பால்குட முளைப்பாரி திருவிழா..
திரளான பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே சூலமங்கலம் 2 சேத்தி பாரதிதாசன் தெரு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்
ஸ்ரீ சக்தி விநாயகர்
ஸ்ரீ வீர சாம்பபசிவமூர்த்தி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய பால்குட முளைப்பாரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சூலமங்கலம் மற்றும் அதனைசுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சூலமங்கலம் 2 சேத்தி பாரதிதாசன் தெரு நாட்டாண்மைகள் கிராமவாசிகள் பஞ்சாயத்து தலைவர், மகளிர் சுய உதவி குழுக்கள், இளைஞரணி செய்திருந்தனர்.