மாதவரம் சிஎம்டிஏ கணரக மற்றும் இலகுரக வாகன நிறுத்தத்தில் சாலை பல்நோக்கு கட்டிடங்கள் மேம்படுத்தும் பணிகளை காணோளி காட்சி மூலம் முதலமைச்சர் துவக்கிவைத்தார்.

சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் 3 வார்டு 25க்கு உட்பட்ட சென்னை வளர்ச்சி குழுமத்தின் மூலம் சுமார் 83 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டு பழைய மாதவரம் நகராட்சியால் நிர்வாகிக்கப்பட்டு வந்த மாதவரம் கணரக மற்றும் இலகுரக வாகனம் நிறுத்த முனையம் சென்னை பெருநகர மாநகராட்சியின் விரிவாக்கத்தில் சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.

மாதவரம் கனரக வாகன மற்றும் இலகுரக நிறுத்த முனையத்தில் 10 எண்ணிக்கையிலான சாலைகள் சுமார் 257 கிலோ மீட்டர் நீளத்திலும் 9 எண்ணிக்கையிலான மழை நீர் வடிகால் கால்வாய் 224 கிலோ மீட்டர் நீளத்திலும் 9 எண்ணிக்கையிலான பயன்பாட்டுக்குழாய் சுமார் 224 கிலோமீட்டர் நீளத்திலும் புதியதாக அமைக்க பெருநகர சென்னை வளர்ச்சி குழுமத்திலிருந்து 38.81 கோடி நிதி பெறப்பட்டு அதற்கான பணிகளை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

இந்தத் துவக்க விழாவில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகோபால் மண்டல அதிகாரி திருமுருகன் செயற்பொறியாளர்கள் கார்த்திகேயன், சின்னதுரை ,, ஆனந்தராவ் , உதவி செயற்பொறியாளர்கள் சரவணமூர்த்தி,, ஜெயலட்சுமி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் துரைசாமி, கார்த்திக் திருநாவுக்கரசு,சேட்டு ,ஏழுமலை ,சங்கீதா பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இறுதியாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *