தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், ஆக- 12. தஞ்சை அறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், மாநில தலைவர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில பொருளாளர் எ.சேகர், மாநில துணை பொருளாளர் எ.டேவிட், மாநில முதன்மை செயலாளர் கோ.தமிழரசன் ஆகியோர் முன்னிலை வைத்தார்கள்.
முன்னதாக மாநில இணை செயலாளர் ஷாஜகான் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மருத்துவ பிரிவு நிர்வாகி டாக்டர் பாரதி மோகன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி கூட்டத்தை துவக்கி வைத்தார்.
கூட்டத்தில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி கே ஜி நீலமேகம், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சகம் பூபதி, தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார், தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி ஜி ராஜேந்திரன், தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல மாநில கூட்டமைப்பு மாநில தலைவர்கள் சிவக்குமார், என் கே சின்னசாமி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தொழிலை நம்பி இருக்கும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி-லிருந்து விளக்கு அளிக்க வேண்டும்.
வாகனத்தின் மீது விதிக்கப்பட்ட அபராதம் தொகையை கட்டும்போது வாகனத்தின் உரிமையாளர் நம்பருக்கு ஓ டி பி செல்வதால் அவர்கள் பழைய மொபைல் நம்பர் வைத்திருப்பதில்லை இதனால் போலீஸ் பெயின் கட்ட முடியாமல் போகிறது. இதன் விளைவாக அரசுக்கு வர வேண்டிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது அபராத தொகை மற்றும் வாகனத்தின் பெயர் மாற்றம் செய்ய முடியவில்லை என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை அனைவருக்கும் நன்றி கூறினார்.