உத்தம்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
உறுதிமொழி ஏற்பு தேனி மாவட்டம் உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஸ்ரீ விகாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கம்பம் நேதாஜி அறக்கட்டளை ஆகிய நிறுவனங்கள் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது
இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீ விகாசா கல்வி குழுமம் சேர்மன் எஸ். இந்திரா உதயகுமார் தலைமை வகித்தார் நேதாஜி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சோ பஞ்சு ராஜா முன்னிலை வைத்தார் போதை பழக்கம் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உத்தம்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் பி சூரிய திலகரணி சிறப்புரையாற்றினார்
இந்த நிகழ்ச்சியில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் போதை அணிவிப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு போதையால் நம்மை நம்பி உள்ள குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வரும் போதை பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று உறுதிமொழி வாசிக்கப்பட்டு அது ஏற்கப்பட்டது இந்த நிகழ்ச்சியால் போதை பொருள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
நேதாஜி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சோ பஞ்சு ராஜா நன்றி உரையாற்றினார்