நேதாஜி மக்கள் இயக்கம் மற்றும் லட்சுமி நகர் பொதுமக்கள் சார்பாக 78வது சுதந்திர தின விழா நிறுவனத் தலைவர் கரைபுதூர் முருகதாஸ் தலைமையில் லட்சுமி நகர் பகுதியில் பதினெட்டாம் ஆண்டு விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது சிறப்பு அழைப்பாளராக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம் ஈஸ்வரன் தேசிய கொடியை ஏற்றி அவர் கூறுகையில் சுதந்திரம் வாங்கி 78 ஆண்டுகள் ஆகிறது இந்திய நாட்டின் விவசாயம் செழிக்க வேண்டும் என்றும் விவசாயி என்றும் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்
அனைவரும் இந்த சுதந்திர தின நன்னாளில் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் சிறப்பு விருந்தினர் மாவட்ட கவுன்சிலர் கொங்கு ராஜேந்திரன் பல்லடம் ஒன்றிய கவுன்சிலர் ஆர் ஆர் ரவி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இந்த 78 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டனர் நிறுவனத் தலைவர் கரைப்புதூர் முருகதாஸ் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி 18 ஆண்டுகளாக லட்சுமி நகர் பகுதியில் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடி வருவதாகவும் தெரிவித்தார்
இதில் நேதாஜி மக்கள் இயக்கத்தின் துணைத் தலைவர் ஆரியமான் பாலு, பொதுச் செயலாளர் பாண்டியராஜ், துணைச் செயலாளர் பிரகாஷ், பொருளாளர் பொன்முடி, மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினர்.