தென்காசி மாவட்டத்தில் 78வது சுதந்திர தின விழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்துகாவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை பார்வையிட்டார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் சீனிவாசன் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார்மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு அரசு துறை சார்ந்த அலுவலர்கள் 482 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு அலுவலரகள் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.