திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கீழ அமராவதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 78-வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
விழாவிற்கு திருவோணமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், தரை விரிப்புகள் வழங்கப்பட்டன. பள்ளி கட்டிடத்திற்கு வண்ண பூச்சி பூசி தந்தஊராட்சி மன்ற தலைவருக்குநன்றி தெரிவித்துபள்ளியின் சார்பில்சிறப்பு செய்யப்பட்டது.பள்ளியின் தலைமை ஆசிரியை ஆனந்தி அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளியின் உதவி ஆசிரியர் பாலசுந்தரம் அனைவருக்கும் நன்றி கூறினார். விழா முடிவில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு மரங்களை வளர்ப்போம்!!!மழையை பெறுவோம்!!!இயற்கை சூழலை பாதுகாப்போம்!!!என்ற உறுதி மொழியோடு விழா மிக இனிதே முடிவுற்றது.