கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள புதுத் தோட்டம் முனீஸ்வரன் கோவில் அருகே சாலையின் குறுக்கே ஒரு பெரிய மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
சம்பவம் அறிந்த வால்பாறை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்