காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 40 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட இந்த பள்ளியானது கடந்த 2018 ஆம் ஆண்டு புணரமைப்பு பணிகளும் 2022-23 ஆம் ஆண்டு வண்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டது
இந்நிலையில் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் அப்போது பெரும் சத்தத்துடன் பள்ளியின் 4 ஆம் வகுப்பு வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் 4 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
உடனே பள்ளி ஆசிரியர்கள் வகுப்பறையை தாளிட்டு பூட்டினர்.
புணரமைப்பு பணிகள் செய்யும் போதே முறையாக பணிகள் செய்யப்படவில்லை என்றும் இந்த கட்டிடத்தை அகற்றி புதுக்கட்டிடம் கட்டி தர வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது