செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணத்தில் திருமாவின் 62 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விசிக இளைஞரணி கேக் வெட்டிக் கொண்டாட்டம்……
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகர மாவட்டம் இளைஞர் அணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 62 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணம் புறநகர் பேருந்து நிலையம் முன்பு மாநகர செயலாளர் கலையரசன் தலைமையில் பிறந்தநாள் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மண்டல துணைச் செயலாளர் முருகதாஸ் மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ் முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் மாரிமுத்து மற்றும் கஸ்பர் அபிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி செயலாளர் குடந்தை தமிழினி கலந்துகொண்டு கேக் வெட்டி பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.