கோவை மாநகர அனைத்து வியாபாரிகள் சங்கம்(CCATA) சார்பில் 78வது சுதந்திர தின முப்பெரும் விழா.
கோவை மாநகர அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் 78வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி கோவை ஒப்பணக்கார வீதி,பெரிய கடை வீதி சந்திப்பு பகுதி போத்தீஸ் கார்னர் அருகில் நடைபெற்றது.
78வது சுதந்திர தின நிகழ்ச்சியில் கல்யாணி ஜுவல்லரி ரவிச்சந்திரன் கொடியேற்றி வைத்தார்.
கோவை மாநகர அனைத்து வியாபாரிகள் சங்கம் கௌரவ தலைவர் (CCATA) ராஜேந்திரா டெக்ஸ்டைல்ஸ் ரவீந்திரன், தலைவர் அனுபவ ஜுவல்லரி அனுபவ் ரவி, துணைத் தலைவர் சாரா கலெக்ஷன் கமால் பாஷா, செயலாளர் அக்ராஸ் யூ கே குரூப் UK உம்மர் கத்தாப், பெருளாளர் ஆனந்தா ஸ்டோர்ஸ் தமிழ்செல்வன், இணை செயலாளர் ரோஷன் அஷ்ரப் ஆகியோர் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினராக தி சென்னை மொபைல் சம்சுஅலி,போத்தீஸ் அசோக், கணபதி சில்க்ஸ் பாலசுப்பிரமணியன், சென்னை சில்க்ஸ் பிரசன்னா அங்கு ராஜ், செல்வா கோல்டு கவரிங் செல்வராஜ், தனபால் டெக்ஸ்டைல்ஸ் தனபால், கோல்டு ஜுவல்லரி அசோசியேசன் தலைவர் சபரிநாதன் ,கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 102 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.இதில் செயலாளர்கள் சாகுல் ஹமீத், முகமது ரஃபி, மதன்குமார், ரூபேஷ், சாதிக் அலி, முகமது முத்து மற்றும் கோவை மாநகர அனைத்து வியாபாரிகள் சங்கம் விழா ஒருங்கிணைப்பாளர்கள் அப்பகுதி வியாபாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.