திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி நடுத்தெரு பகுதியில் உள்ள வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுமறு கட்டமைப்பிற்கானதேர்தல் சிறப்பு ஆசிரியை சத்தியபாமா முன்னிலை யில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக திமுக நகர செயலாளர் பா. சிவனேசன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ரம்ஜான் பீவி தங்க.சிவராஜன், ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்,
மேலும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை ஜலஜா அனைவரையும் வரவேற்று,உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறையை விளக்கினார்.பள்ளி மேலாண்மை குழு தலைவராக சரண்யா, துணைத் தலைவராக அம்பிகா தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்,புதிதாக தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.இதில் பள்ளியின் உதவி ஆசிரியை அலங்கார மேரி நன்றி நன்றி கூறினார்.