பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதை ஒழிப்பு பேரணி….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அய்யம்பேட்டை கிளை சக்கராப்பள்ளி கிளைகள் சார்பாக மது புகழ் கஞ்சா போன்ற போதை பழக்கங்களுக்கு எதிராக போதை ஒழிப்பு பேரணி தஞ்சை வடக்கு மாவட்ட துணை செயலாளர் அயூப்கான் தலைமையில் நடைபெற்றது.
பேரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பேச்சாளர்கள் முகமது கௌஸ் ஷேக் தாவூத் அது ஒரு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இப்பேரணியில் பெண்கள் குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கையில் போதை ஒழிப்பு பதாகைகளுடன் கண்டன முழக்கமிட்டவாரு அய்யம்பேட்டை முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.