விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்களின் 62 வது பிறந்தநாளினை முன்னிட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் ECRC எனப்படும் ஆதரவற்ற மனநோயாளிக்கான மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் விசிக சார்பில் காலை உணவு வழங்கல் நிகழ்வு…

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் 62வது பிறந்தநாளினை முன்னிட்டு இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ECRC எனப்படும்
ஆதரவற்ற மனநோயாளிக்களுக்கான மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் முன்னாள் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் தலைமையில் அவரது புதல்வன் நாகஅர்ஜுன் ஏற்பாட்டில் , தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ரபிக் , தேனி திண்டுக்கல் மண்டல செயலாளர் தமிழ்வாணன் முன்னிலையில் காலை உணவு
வழங்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பெரியகுளம் ஒன்றிய செயலாளர் மு.ஆண்டி , பெரியகுளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் சுசி.தமிழ்பாண்டியன் , துணை செயலாளர் ஆண்டவர் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *