காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பெரும்கோழி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ துருக்கி அம்மன் ஆலயத்தில் 13ம் ஆண்டு ஆடித்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .
இதில் காலை துருக்கிஅம்மனுக்கு பொதுமக்கள் சீர்வரிசை கொண்டு வரும் நிகழ்ச்சியில் , கணபதி ஹோமம் நாதஸ்வர மங்கள இசை முழங்க அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு தீப ஆராதணை நிகழ்ச்சியும் குடம் வீதி உலாவும் நடைபெற்றது இந்நிகழ்வில் அப்பகுதியில் உள்ள சுற்றியுள்ள தெருக்களில் அம்மன் திருவீதி ஊர்வலமாக தாரை தப்பட்டை முழங்க பொய்க்கால் குதிரைகள் நடனமாட கரகாட்டம் ,மயிலாட்டம் ,மானாட்டம் ,ஆகிய வைபவங்களுடன் அந்த கிராம முக்கிய வீதிகளில் உலா வந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை இசைக்கல்லூரி மாணவர்கள் தொகுத்து வழங்கிய பக்தி பாடல்கள் இன்னிசை கச்சேரி நடைபெற்றது . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர்.இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பெருங்கோழி துருக்கி அம்மன் ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்புடன் செய்திருந்தனர்.பாதுகாப்பான
ஏற்பாடுகளை உத்திரமேரூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் உதவி இன்ஸ்பெக்டர் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர்.