முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அஞ்சலி
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தை காங்கிரஸ் கட்சியினர் மலர்களால் அலங்கரித்தனர்.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான செல்வ பெருந்தகை கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ராஜீவ் காந்தி நினைவிட மேலிட பொறுப்பாளர் முருகானந்தம் உட்பட திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்