தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் மாவட்டம், கிங்கு ஷிட்டோரியூ கராத்தே கழகத்தின் சார்பாக நடைபெற்ற கலர் பெல்ட் மற்றும் பிளாக் பெல்ட் கராத்தே தகுதி தேர்வில் 300கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தேசிய தலைமை தேர்வாளர் கியோஷி அன்பரசன் மற்றும் பயிற்சியாளர் ஷிஹான் ஆபிரகாம் கலந்துகொண்டு தேர்வை நடத்தினர்.
இதில் தஞ்சையை சேர்ந்த கபிலன் மற்றும் சாய் ப்ரீத்தி ஆகியோர் கலந்துகொண்டு அனைத்து தேர்விலும் வெற்றிபெற்று பிளாக் பெல்ட் தகுதி பெற்றனர், இத்தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பெல்ட் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாஸ்டர் அசோக் சாமுவேல், செயின்ட் மேரீஸ் பள்ளியின் குழும தலைவர் லையன் லாரன்ஸ், தலைமை காவலர் ராஜேஸ்வரி, பரதநாட்டிய பேராசிரியர் ப்ரீத்தா பினேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் ஷாலினி மற்றும் யோகசித்ரா, மருத்துவர் டீனா ஜீவா, வெயிட்லிப்டிங் பயிற்சியாளர் தாரணி ஆகியோர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை மாஸ்டர்கள் மதுக்கண்ணன், ராம்குமார், விஷ்ணுப்ரகாஷ், ஆனந்தகுமார், ஜெய்ப்ரியன், நாகலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். இறுதி நிகழ்வாக நிஷாந்த் நன்றிக் கூறினார்.