ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் தணிக்கை குழு மதிப்பீடு தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஐ கியூ ஏசியின் சார்பில் தணிக்கை குழுவினர் வருகை புரிந்தனர்.
கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா துணை முதல்வர் டாக்டர் பி வாணி மற்றும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தம் ஆகியோர் முன்னிலையில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி வேதியியல் துறை இணைப் பேராசிரியர் டி.சுகுமாரன் கல்லூரி தாவரவியலில் ஆராய்ச்சி மற்றும் முதுகலை படிப்புகளுக்கான துறைத் தலைவர் விலங்கியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் என் செந்தில்குமார் மற்றும் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் யு சி சி எம் எம் டி சி உதவி பேராசிரியர் ரிச்சர்டு பால் ஆகியோர் துறை வாரியாக அனைத்து துறைகளுக்கும் சென்று தணிக்கை செய்து துறை சார்ந்த பேராசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர் கல்லூரி அலுவலகம் மற்றும் நூலகம் ஆகியவற்றிற்கு தனித்தனியாக சென்று தணிக்கை செய்து மதிப்பீடு செய்து அறிக்கை சமர்பித்தனர்