நாமக்கல்.
பூட்டு மற்றும் சங்கிலியுடன் வந்த விவசாயிகள் டாஸ்மாக் கடையை பூட்டு போட முயற்சி செய்ததால் போலீசார் கைது செய்தனர்.
விவசாயிகளின் நிலத்தில் உள்ள தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை தமிழக அரசு நீக்ககோரி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் விவசாயிகள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள் கையில் பூட்டு மற்றும் சங்கிலியுடன் வந்து முழக்கங்களை எழுப்பியவாறு டாஸ்மாக் கடை இழுத்து பூட்ட வந்த போது போலீசார் தடுத்தி நிறுத்திய போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது போலீசாரை மீறி கடைக்கு பூட்டு போட முன் வந்த விவசாயிகள் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
விவசாயிகள் டாஸ்மாக் கடையை மூடி பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திறக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ்மாக் கடை மூடி இருப்பதை பார்த்து மது அருந்து வந்த மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.