தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் பாத்திமா நகர் ஆரம்ப சுகாதார நிலையம் சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சரால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்கப்பட்டது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சுவற்றில் நோய் தொடர்பான போர்டு மாற்றப்பட்டுள்ளது
அந்த போர்டில் ஒரு பக்கம் தமிழகம் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமாக இருந்த கருணாநிதி படமும் மற்றொருபுறம் அதிமுக பொதுச் செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி படம் பொருத்தப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் யார் என்று தெரியாமல் தமிழக முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் படம் பொருத்துவதற்கு பதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி படத்தை மாட்டியுள்ளது வியப்பாகவே உள்ளது மொத்தத்தில் தமிழகம் முதலமைச்சர் யார் என்று தெரியாமலேயே தூத்துக்குடியில் மாநகராட்சியில் அதிகாரியில் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது