திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு முன்னேற்பாடு தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) ராஜேஸ்வரி உட்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.