பூலித் தேவர் திருவுருவ சிலைக்கு திராவிடத் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை ;-
தென்காசி மாவட்டம்,வாசுதேவநல்லூர் அருகே நெல்கட்டும் செவல் கிராமத்தில் உள்ள பூலிதேவரின்
309 -வது ஜெயந்தி விழாவில் திராவிடத் தமிழர் கட்சி சார்பில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர்
கருவீரபாண்டியன்,தலைமையில் பூலித் தேவரின் திருவுருவட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் வடக்கு மாவட்ட தலைவர்
லட்சுமணன்,வடக்கு மாவட்ட செயலாளர்
மகாலிங்கம்,வடக்கு மாவட்ட துணைத் தலைவர் மாரிமுத்து, வடக்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஷாம்ளா,வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சங்கை மதன், சங்கரன் கோவில் சட்டமன்றத் தொகுதி செயலாளர் வேல்முருகன் ,வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்த் , மற்றும் சஞ்சய், பெருமாள், மைக்கேல், ராஜ் , சமூக நல்லூர் கிளைநிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.