மேற்கு வங்க மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் உள்ள மருத்து – வக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, – கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்தக் கொலைக்குக் கார ணமானவர்களைக் கண்டறிந்து உரிய தண்டனை வழங்க வேண்டும், நாடு முழுவதும் பெண் குழந்தைகள், – மாணவியர், பெண் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார்.மாவட்டச்செயலர் நீதிராஜா கோரிக்கையை விளக்கிப் பேசினார். மாவட்ட துணைத் தலைவர்கள் சந்திரபாண்டி, ஜெ.மகேந்திரன், த.மனோகரன், மாவட்ட இணைச் செயலர்கள் பரமசிவன், ராம் தாஸ், பெரியகருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சுஜாதா, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சு.கிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் சு.பாண்டிச் செல்வி, தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநிலச் செய லர் ஆனந்தவள்ளி, மாநகராட்சி சுகாதார செவிலியர் சங்க மாநிலத் தலைவர் பஞ்சவர்ணம் ஆகியோர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலர் ஆ.செல்வம் சிறப்பு அழைப்பாள ராகப் பங்கேற்று நிறைவுரையாற் றினார்.
மாவட்டப் பொருளாளர் சந்திரபோஸ் நன்றி கூறினார்.
இதில் திரளான பெண் ஊழியர்கள் பங்கேற்று, கையில் மெழுகு வர்த்தி ஏந்தி நின்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.