தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்பது தான் நிம்மதி தருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேச்சு.
கும்பகோணம் தலைமை அரசு மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டினார்.
அப்போது அமைச்சர் சுப்ரமணியன் பேசியதாவது:-
ஆப்பிரிக்க நாடுகள் மட்டும் அல்ல 120க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த குரங்கம்மை பாதிப்பு என்பது இன்றைக்கு பரவலாக இருக்கிறது.
தமிழகத்தின் முதலமைச்சர் கண்காணித்து சிகிச்சை அளிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அதற்கான முன்னேற்பாடுகளை சரியாக செய்திட வேண்டுமென்று அறிவுறுத்திய காரணத்தினால் திருச்சி சென்னை கோவை மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.
இன்று காலை கூட திருச்சி விமான நிலையத்தில் ஆய்வு செய்தோம் ஒவ்வொரு விமான நிலையத்திலும் வருகை தரும் பயணிகளிடம் அவருடைய வெப்பத்தை கணக்கிடுகிற அந்த கருவியின் மூலம் கண்காணிக்கப்பட்டு காய்ச்சல் பாதிப்புகள் இருக்கிறதா என்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நான்கு பெரு நகரங்களில் குரங்கம்மைக்கு என்று வார்டுகள் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, திருச்சி விஸ்வநாதன் அரசு மருத்துவமனை, கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மதுரையில் ராஜாஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, குரங்கம்மை சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் இருக்கிறது தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை என்பது தான் நிம்மதி தருகிறது.
பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இவற்றுக்கான தீர்வு காண்பதற்கு நம்முடைய மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்றைக்கும் நம்முடன் இருக்கிறார் அவர் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் அவரால் இன்றைக்கு இத்தகைய திட்டங்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.