கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஆவத்துவாடி கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் ஆலயம் தொன்பொன்னை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது
இத்திருக்கோயிலில் சிதலமடைந்தின் காரணமாக அக்கிராம மக்கள் கோவிலை புதிதாக புணர் அமைக்கும் பணிகளை துவங்கி கடந்த சில மாதங்களாக நடைபெற்று கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக இன்று நடை பெற்றது
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தருமபுரி கிருஷ்ணகிரி வேலூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து இருந்தனர் இதைத்தொடர்ந்து முன்னதாக கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது
இரண்டு கால யாகசாலை பூஜையில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் பல்வேறு யாக ஹோமங்கள் நடைபெற்று பூர்ணாஹூதி அளிக்கப்பட்டன பின்னர் மங்கள இசை வாத்தியங்களுடன் கருடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் ரகு தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் ஊற்றப்பட்டது
தொடர்ந்து கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப் பட்டவுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சின்னமொரசப்பட்டி தும்மல்அள்ளி கொண்டிகானஅள்ளி பகுதி களை சேர்ந்த கோம்பு குலதெய்வ பங்காளிகள் மற்றும் 5000 க்கும் மேற்பட்ட பக்தர்களும் இந்த கும்பாபிஷேக விழாவை கண்டு களித்தனர்
மேலும் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.