விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கும்பகோணம் வீர சைவ மடத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்தில் பா.ஜ.க,இந்து மக்கள் கட்சி, சிவசேனா, அகில பாரத இந்து மகா சபா, இந்து முன்னணி ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
அப்போது விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காவல்துறை மற்றும் வருவாய்த்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை கூடுதலாக விதிக்கும் நடவடிக்கை எதிர்த்து ஏற்கனவே பல இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைக்கும் புதிதாக வைக்க இருக்கும் விநாயகர் சிலைக்கும் புதிய விதிமுறைகளை விதித்து விநாயகர் சதுர்த்து விழாவினை முடக்க நினைக்கும் தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்னர்.
விதிமுறைகளை தளர்த்தி விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.எங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால் வருகிற 8ந் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒத்திவைக்கப்படும் எனவும்,
அனைத்து விநாயகர் சிலை பிரதிஷ்ட செய்ய அனுமதி வழங்கிய பிறகு ஊர்வலம் நடைபெறும் என்றும் காவல்துறை அனுமதி வழங்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விநாயகரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.