செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம்,, வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் பேராசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் சி. ருக்மணி தலைமை தாங்கினார்.
கல்லூரி செயலாளர் மு. ரமணன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, தன்னம்பிக்கை பேச்சாளர் அரிமா இரா. சரவணன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் இன்றைய தகவல் தொழில்நுட்ப நிலையில் ஆசிரியர்கள் தங்களது மேம்பாட்டை உயர்த்திக் கொண்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் அனைத்துத் துறை பேராசிரியர்கள் மற்றும் 2000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இறுதியில் மாணவி பிரதிநிதி நன்றி கூறினார்.