திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள இனாம்கிளியூரில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது பாதை மற்றும் பொது வாய்க்காலை ரெடிமேடு காம்பவுண்ட் சுவர் கட்டி உள்ளார்.
இதனால் அந்தப் பகுதியை பொதுமக்கள் பயன்படுத்த இயலவில்லை. எனவே அதற்கு காரணமான இனாம் கிளியூர் ஊராட்சி மன்ற தலைவி பாக்கியலட்சுமியை கண்டித்தும்,அவருக்கு துணை போகும் வலங்கைமான் வட்டாட்சியர், ஆவூர் வருவாய் சரக ஆய்வாளர் மற்றும் இனாம் கிளியூர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வலங்கைமானில் நடைபெற்றது.
இதில் விடுதலை சிறுத்தை கட்சி துணைப் பொதுச் செயலாளர் ரஜினிகாந்த்,விடுதலை சிறுத்தை கட்சியின் திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ் ஓவியா, வலங்கைமான் மேற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அரச முதல்வன், வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராதா,வலங்கைமான் நகர செயலாளர் ஜீவா உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.