பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே எஸ் சரவணகுமார் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தாட்கோ மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு 90% மானியத்தில் வழங்கப்படும் புதிய வீட்டிற்கான ஆணைகள் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், அகமலை ஊராட்சி பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா உரிய பயனாளிகளுக்கு வழங்கினார்
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் அகமலை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மலை வாழ் மக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்.