கம்பம் அருகே ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சாத்த ஓடைகரையில் அமைந்துள்ள சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீ மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம் இது விமர்சையாக கோலாகலமாக நடைபெற்றது
இந்த விழாவிற்கு கம்பம் புதுப்பட்டி நிலக்கிழார் டிவி சிவாஜி மோகன் தலைமை வகித்தார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றன
நேற்று வியாழக்கிழமை காலை புண்யாவாஜனம் கால சாந்தி பூஜை கால சாந்தி பூஜை ஸ்ர்வதேவர்ச்சனம் கோ பூஜை அக் ஷிமோஐனம் அக்னி ஆராதனம் இரண்டாம் கால யாகம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் சக்தி யாகம் மகா கணபதி யாகம் கருடா ழ்வார் யாகம் கோபுர சக்தியாகம் பூர்ணாஹிதி அந்தஹேரமம் அக்னி ஸமாரோபனம் கும்பங்கள் புறப்பாடு போன்ற யாக பூஜைகள் நடைபெற்று பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது
இந்த கும்பாபிஷேகத்தில் கம்பம் புதுப்பட்டி கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்ரீ வரதராஜ பெருமாள் அருள் பெற்றனர்
இந்த கும்பாபிஷேக விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கம்பம் புதுப்பட்டி நிலக்கிழார் டி.வி. சிவாஜி மோகன் வெகு சிறப்பாக செய்திருந்தார் கும்பாபிஷேகத்தை ஒட்டி விழாவிற்கு வந்த அனைத்து பக்தகோடிகளுக்கும் பொது மக்களுக்கும் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது