ஆண்டிபட்டி தேனி கம்பம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு இல்லத்தரசிகள் அதிர்ச்சி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கம்பம் தேனி ஆகிய பூ மார்க்கெட்டுகளில் பூக்கள் விலை விநாயகர் சதுர்த்தி முகூர்த்த நாட்கள் ஆகிய விசேஷ தினங்களை ஒட்டி பூக்கள் விலை கடும் உயர்வு ஏற்பட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்

மாவட்டத்தில் பூக்கள் வாழை இலை தேங்காய் வாழைப்பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் கடும் உயர்வு ஏற்பட்டதால் ஆன்மீக பக்தர்கள் இல்லத்தரசிகள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது மாவட்டத்தில் சீலையம்பட்டி தேனி கம்பம் ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் பூ மார்க்கெட் செயல்படுகிறது

இந்த பூ மார்க்கெட்டிற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து விளைவிக்கப்படும் பூக்களை விவசாயிகள் இந்த மார்க்கெட்டில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர் இதை வாங்கும் வியாபாரிகள் விவசாயிகளுக்கு வழக்கமான குறைந்த விலையை கொடுத்துவிட்டு விசேஷ நாட்கள் மற்றும் மூகூர்த்த நாட்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது நேற்று முன்தினம் ரூபாய் 500 க்கு விற்பனை செய்த மல்லிகைப்பூ நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிலோ 1500 க்கு விற்பனை செய்யப்பட்டது

இதேபோல் வாழை இலையும் கடும் விலை உயர்வு ஏற்பட்டு ஒரு மடி வாழை இலை 20 வைக்கப்பட்ட நிலையில் இன்று ஒரு மடி இலை நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது இந்த விலை உயர்வால் வியர்வை சிந்தி அதை விளைவிக்கும் விவசாயிக்கு அந்த பலன் கிடைப்பது இல்லை மாறாக விவசாயிகளிடம் வாங்கும் வியாபாரிகள் அந்த பொருளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதால் இல்லத்தரசிகள் மற்றும் ஆன்மீக பக்தர்கள் கடும் பாதிப்பு அடைகின்றனர்

மேலும் இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் ஒரு நல்ல நாட்களில் கூட பூக்கள் வாங்க முடியாத நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூக்கள் விலை மற்றும் வாழை இலை விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *