முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் 10 ஆம் தேதி துவக்கம் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தகவல் தேனி மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்கும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா தெரிவித்தார் இதுகுறித்து அவர் மேலும் கூறியது முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் ஐந்து பிரிவுகளாக நடக்கிறது

இதில் தடகளம் நீச்சல் சிலம்பம் கேரம் செஸ் கைப்பந்து வாலிபால் கோ கோ கிரிக்கெட் இறகு ப்பந்து கபாடி உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது ஆன்லைனில் பதிவு செய்த பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கல்வி நிலைய அடையாள அட்டை சான்றிதழ் அரசு அலுவலர்கள் அலுவலக அடையாள அட்டை பொதுமக்கள் இருப்பிட சான்று உடன் பங்கேற்க வேண்டும் மேற்குறிப்பிட்ட அடையாள அட்டைகளுடன் ஆதார் விளையாட்டுகளுக்கு உரிய உபகரணங்கள் கொண்டு வர வேண்டும் கால்பந்து கோகோ தேனி என்.எஸ் மேல்நிலைப்பள்ளி கிரிக்கெட் போலீஸ் ஆயுதப்படை மைதானம் கேரம் செஸ் என் எஸ் கலை அறிவியல் கல்லூரியில் நடக்கிறது

மற்ற போட்டிகள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 10 ஆம் தேதி கல்லூரி மாணவர்களுக்கு செப்டம்பர் 17ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி பொதுமக்களுக்கு செப்டம்பர் 21ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் 23ஆம் தேதி ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரில் அல்லது தொலைபேசியில் 04546 253090 என்ற எண்ணில் பேசலாம் பதிவு செய்தவர்கள் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *