திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், திண்டுக்கல் தெற்கு ஒன்றியம், குரும்பபட்டி ஊராட்சி மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பிரிவில் திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி உரையாற்றினார்.
இந்நிகழ்வில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், திண்டுக்கல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வெள்ளிமலை, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கணேசன், திண்டுக்கல் ஒன்றிய பெருந்தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.