விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஏ.கே. டி. தர்மராஜா பெண்கள் மேல் நிலைப் பள்ளி ஆசிரியை விஜயலக்ஷ்மி கல்விச் சேவையை பாராட்டி ரோட்டில் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
முன்னாள் பள்ளியின் தாளாளர் ஏ.ஆர்.தசரத ராஜா பங்கேற்று ஆசிரியை விஜயலஷ்மியின் பணிகளை சிறப்புற எடுத்துக் கூறி , வளமான வாழ்த்துகளை தெரிவித்தார். ரோட்டரி மருத்துவர் ஜெயக்குமார் ஆசிரியை விஜயலட்சுமியின் சாதனைகளை பாராட்டிப் பேசினார்.
ஆசிரியை விஜயலட்சுமியின் மாணவர்கள் கார்த்திகேயன், செண்பகம், சாந்தி தம் நினைவு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். செண்பகம் – தம் நினைவுப் பரிசுகளை ஆசிரியைக்கும், பள்ளியின் டிரஸ்டுக்கும், ரோட்டரி சங்கத் தலைவருக்கும் வழங்கினார். 1975,1976 களில், முதன் முதலாக தங்க மெடல் வாங்கி,ஏ.கே. டி. பெண்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்த செண்பகத்திற்கு சிறப்பு விருந்தினர் மாலை அணிவித்தார்.
ரோட்டரி சங்க சேர்மன் செல்வராஜ் விழாவில் பங்கேற்று வாழ்த்தி பேசினார். முன்னாள் மாணவர்கள் , விளையாட்டுகளில் சாதனை புரிந்தவர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டு ஆசிரியர் விஜயலக்ஷ்மிக்கு சிறப்பு செய்தனர். இந்த நிகழ்ச்சியை சியாமளா தொகுத்து வழங்கினார்.