திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரியின் சமூகப்பணித்துறை சார்பில் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் அரிமா. லயன் ரெத்தினம், கல்லூரி இயக்குனர் முனைவர் துரை ரெத்தினம் அவர்களின் ஆலோசனைபடியும், கல்லூரி முதல்வர் முனைவர் சரவணன் அவர்களின் வழிகாட்டுதலில், துறைத்தலைவர் திருமதி. ரெஜினா அவர்களின் அனுமதியோடு பழனி அருகில் உள்ள ஆலமரத்துகளம் எனும் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு, மத்திய, மாநில அரசு பெண்களுக்கு உருவாக்கியுள்ள திட்டங்கள் பற்றியும், சுயதொழில் முறைகள், பெண் கல்வி மேம்பாடு, சுகாதார முறைகள், பாதுகாப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சமூகப்பணித்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ராஜா நிகழ்வில் கலந்து கொண்டவர்களை வரவேற்றும் பெண் கல்வி மேம்பாடு மற்றும் அதன் முக்கியம் பற்றியும், இன்றைய தேவை பற்றியும் விளக்கி பேசினார். அடுத்ததாக சமூகப்பணித்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கதிரவன் பெண்களின் சுகாதார மேம்பாடு பற்றி கிராம பெண்களிடம் பல்வேறு கருத்துக்களை எடுத்து உரைத்தார்.
சமூகப்பணித்துறை உதவிப்பேராசிரியை சாலிமா, கிராமப்புற பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசினார். இந்த நிகழ்வில் சமூகப்பணித்துறை மாணவர்கள் பெண்களுக்கான மத்திய, மாநில அரசுகள் அறிவித்து உள்ள பல்வேறு திட்டங்கள் பற்றி பதாகைகள் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இறுதியில் சமூகப்பணித்துறை முதுகலை மாணவி தீபிகா நன்றியுரை வழங்கினார்.