சின்னமனூரில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் கொண்டாட்டம் தேனி மாவட்டம் சின்னமனூர் நகர தலைவர் லோகேந்திர ராஜன் தலைமையில் பாஜகவினர் நகரின் பிரதான வீதிகளில் சென்று பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் செப்பேடு புகழ் சிவகாமி அம்மன் கோவில் மற்றும் முக்கிய திருத்தலங்களில் பாரத பிரதமர் பல்லாண்டு காலம் வாழ்ந்து இந்தியாவை வல்லரசாக தொடர்ந்து பாரத பிரதமராக இருக்க வேண்டுமென மனதார தெய்வங்களை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தார்கள். மேலும் பாஜக பிரதான வீதிகளில் உள்ள கொடி கம்பங்களில் கொடி யேற்றப்பட்டு அங்குள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். நிறைவில் பாஜக நகர தலைவர் லோகேந்திரராஜன் நன்றி கூறினார்