ரஷ்யாவில் உள்ள 5595 அடி உயரம் கொண்ட எல்பிரஸ் மலைச்சிகரத்தின் மீது ஏறி சாதனை படைத்த முதல் தமிழக வீரர் என்ற பெருமையைப் பெற்ற தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்த விவசாயி நல்லசாமி என்பவரது மகன் வெங்கட சுப்ரமணியன் (18/09/2024) சென்னை சிஐடி காலனி இல்லத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
சாதனை படைத்த சான்றிதழை கனிமொழி கருணாநிதியிடம் வெங்கட சுப்ரமணியன் காண்பித்து மகிழ்ந்தார்.