தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே திருமங்கலக்குடி
அஸ்-ஸலாம் அறக்கட்டளை பொதுக் குழு கூட்டம் அஸ்-ஸலாம் பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைப்பெற்றது.
இதில் அறக்கட்டளை உறுப்பினர்கள் பெறும்பான்மை
150 பொதுக்குழு உறுப்பினர்களில் 118 உறுப்பினர்களுக்கு மேலாக கலந்து கொண்டு ஏகமனதாக கீழ்கண்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
அறக்கட்டளை பொதுக்குழு கூட்டம் ஒவ்வொரு வருடாந்திர கல்வி ஆண்டுகளில் பொதுக்குழு கூட்ட வேண்டும். கடந்த சில வருடங்களாக பொதுக்குழு கூட்டம் நடைப்பெறவில்லை.இது அறக்கட்டளை விதிமுறைகளுக்கு எதிரானது.இதனை இப்பொதுக்
குழு வன்மையாகக் கண்டிக்கிறது,
கல்லூரியின் தாளாளர் பதவி நீக்கப்பட்டு கல்லூரியின் நிர்வாகப் பொறுப்பை செயல்படும் கல்லூரி முதல்வரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது,
SC/ST/PMSS மாணவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கல்வி கட்டணங்களுக்கான முறையான கணக்குகள் சமர்ப்பிக்க பொதுகுழு கேட்டு கொள்கிறது.
அஸ்-ஸலாம் அறக்கட்டளை மற்றும் பொறியியல் கல்லூரியின் வரவு – செலவு கணக்குகள் அனைத்தும் இனி இணைய தளம் (online) வசதி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறக்கட்டளையின் அனைத்து உறுப்பினர்களின் இல்லம் தேடி வரும் தொழில்நுட்பத்தை
செயல்படுத்துவது என்றும்,
புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும், கல்லூரிக்கு பொருளாதாரத்தை திரட்டுவதற்கும்,கல்லூரிக்கு நற்பெயர் விளங்க செய்ய வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் புதிய நிர்வாகம் செயல்படுவது
அறக்கட்டளைக்கு மாற்றம் செய்வது அல்லது தொடர்ந்து நடத்துவதற்கும் நிரந்தர உறுப்பினர்கள் ஆறு நபர்களுடன்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
எனவே புதிய நிர்வாகிகளின் தலைமையில் அஸ்-ஸலாம் கல்லூரி செயல்படும் என தீர்மானிக்கப்படுகிறது.
அறக்கட்டளையின் 2024 – 2027 க்கான பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
தலைவராக முனைவர் சாகுல் ஹமீது, துணைத்தலைவர்களாக
அலாவுதீன்,முஹம்மது சுல்தான்,
செயலாளராக இனியவன் ஹாஜி முஹம்மது,துணை
செயலாளர்களாக சிராஜுதீன்,
கலிபுல்லா, பொருளாளராக
அக்பர் அலி, தணிக்கையாளராக
எஸ்.எம்.பாரூக், நிர்வாக குழு உறுப்பினர்களாக அப்துல் ரஹ்மான்,ஹாஜா நஜ்முதீன்,
சிகாபுத்தீன், அப்துர் ரஹ்மான், ,அஜீசுல்லாஹ்,ஜெஹபர்அலி
பகுருத்தீன்,சக்கூர்பாஷா,
அஷ்ரப் அலி,பாபிதா சையத் முஹம்மது,பர்வீன் சாதிக், ஷம்ஷாத் பேகம் ஜபருல்லாஹ்,
கமருன்னிஷா ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.