போடிநாயக்கனூர்
இந்துமுன்னணி சார்பாக முன்னாள் மறைந்த மாநில தலைவர் இராமகோபாலன் 98 ஆவது பிறந்தநாள் விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இந்து முன்னணி சார்பாக அதன் முன்னாள் மாநில தலைவர் இராமகோபாலன் 98 வது பிறந்தநாள் பஸ் நிலையம் எதிரே உள்ள தேவர் சிலை முன்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் கணேசன் தலைமை வகிக்க போடி நகரச் செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் ராமகோபாலனின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து அங்குள்ள மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்
மேலும் நம் இந்து கோயிலில் உள்ள மூடநம்பிக்கையான கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும் சிறுபான்மை மக்களான முஸ்லிம் கிறிஸ்துவ ஆலயங்களில் இது போன்று கட்டண தரிசனங்கள் கிடையாது எனவே அனைவரும் சமம் என்ற முறையில் எல்லோரும் ஒரே இடத்தில் நின்று தெய்வத்தை வணங்க தமிழக அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்து முன்னணியின் கொள்கை என்பதை வலியுறுத்தி பேசினார்கள் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர் அங்குவேல் மற்றும் இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், பாஜக நகர் மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.