பெரம்பலூரில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் .
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பாக மத்திய அரசின் நிர்வாகத்தில் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை 1000 -த்திலிருந்து 5000 மாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்ற கோரிகையுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக பெரம்பலூரில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.மணிவேல் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நடைபெற்றது.
பிறகு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அவர்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட தலைவர் பி. சிவராஜ் தலைமையில் வழங்கினார்கள்.இந்நிகழ்வில் மாவட்ட செயல் தலைவர் சிவம் செந்தில்குமார்,மாவட்ட பொருளாளர் அமுதா கர்ணன்,மாவட்ட துணைத்தலைவர் எம்.தமிழரசன்,மாவட்ட இணைச் செயலாளர் சி.கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட சட்ட ஆலோசகர் இனியவன்,மாவட்ட செயலாளர் ஏ.கே. செந்தில்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் கோவிந்தராஜ் மேலும் மாவட்ட பொறுப்பாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.இராமச்சந்திரன்,எ.செல்வராஜ், ஆர்.ஆறுமுகம் மற்றும் சர்க்கரை ஆலை ஓய்வூதியதாரர்கள் பலர் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.