பழனி அருகே தாசில்தார் தலைமையில் 50 ஆண்டுகால பிரச்சனை குறித்து அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றன..
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டு பகுதியில் கடந்த 50 வருடங்களாக வக் போர்டுக்கு சொந்தமான நிலம் என்று தெரியாமல் அப்பகுதி பொதுமக்கள் குடியிருந்து வந்த நிலையில் தற்போது ஆயக்குடி ஜமாத் நிர்வாகத்தின் மூலம் வக்போடு வாரியம் அனைவரையும் காலி செய்ய வேண்டும் என அறிவிப்பு செய்தன.
மேலும் அப்பகுதியில் ஆயக்குடி பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அறிவிப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆயக்குடி ஜமாத் நிர்வாகம் மற்றும் 16வது வார்டு பொதுமக்கள் ஆகிய இரு தரப்பினரிடையே
வட்டாச்சியர் சஞ்சய் காந்தி,காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயம் ஆயக்குடி காவல் ஆய்வாளர் பாலமுருகன் பேரூராட்சித் தலைவர் மேனகா ஆனந்தன் செயல் அலுவலர் செல்வகுமார் துணைத் தலைவர் சுதா மணி ஆகியோர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றன.
இந்த பேச்சு வார்த்தையில் வக்போர்டு வாரியத்துக்கு சொந்தமான இடத்தை அளந்து உறுதிப்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
மேலும் அதுவரை அப்பகுதி மக்களுக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து இரு தரப்பினரும் இதை ஏற்றுக்கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுற்றன.
இந்நிகழ்வில் விசிக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திருவளவன் மாவட்ட துணை செயலாளர் பாவேந்தன் தொகுதி செயலாளர் முத்தரசு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், கவுன்சிலர் சரஸ்வதி வாஞ்சிநாதன், அஜ்மத் அலி வழக்கறிஞர் ஜீவானந்தம்,பொன்.முருகானந்தம், கிரிபாலன், கலையரசன், முருகன், செல்லத்துரை, சின்னத்துரை, தர்மர், திரௌபதி, ராமுத்தாய், ஜான்சி ராணி, சுந்தரியம்மாள், செல்வி, வீரம்மாள், முருகாத்தாள், இரணியன், கன்னிமுத்து, சாம்புகன், தண்டபாணி, தங்கவேல், துர்க்கையன்னண், கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றன.