திருநெல்வேலி
கல்லிடை ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறனர்.
நெல்லை -செங்கோட்டை வழித்தடத்தில் அதிக வருவாய் தரும் இந்த ரயில் நிலையத்தில்
அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை
கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் உமர் பாரூக்,
ஆலோசகர் ஜான் பால் விக்கிள்ஸ் வொர்த்,
நிர்வாகி வெ.கார்த்திக்ஆகியோர்,
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர்
டாக்டர் எல்.முருகனிடம் வழங்கினர்.
மாவட்ட பிஜேபி தலைவர் தயா சங்கர் உடனிருந்தார்.
இதே போல், இந்த ரயில் நிலையத்தின் நடைமேடையை 24 பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.
எல்லா எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்லும் இந்நிலையத்தில் கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து தூத்துக்குடி வரை செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலும் நின்று செல்ல வேண்டும் என்றும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.