திண்டுக்கல் மாவட்டம் பழனி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இத்திரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பழனி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக விற்பனை செய்து வரும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்து விற்பனை செய்து வருவதாக திரைப்பட இயக்குனர் மோகன் ஜி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பழனி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டு வரும் பஞ்சாமிர்தத்தில் எவ்வித கலப்படமும் எவ்வித மாத்திரைகளும் கலக்கப்படவில்லை என திருக்கோயில் நிர்வாகம் சார்பாக விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டு வரும் பஞ்சாமிர்தத்தின் மீது அவதூறு கருத்தை பரப்பிய மோகன் ஜிமீது அடிவாரம் காவல் நிலையத்தில் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக புகார் அளிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அடிவாரம் காவல்துறையினர் மோகன் ஜி மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து திராவிட மாடல் ஆட்சியில் செய்து வரும் ஆன்மீகப் பணிகளை குறை கூறும் வகையில் இதுபோன்று அவதூறு செய்திகளை பரப்பி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்..