செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று RBSK மருத்துவக் குழுவினரால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மருத்துவர்கள் அருண்குமார், மணிமேகலை ஆகியோர் பங்கேற்று மாணவர்களின் உடல்நிலையை பரிசோதித்தார்கள். மேலும் அவர்களுக்கான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் செவிலியர் கீதா மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வினை பள்ளி தலைமை ஆசிரியர் க.வாசு ஒருங்கிணைத்தார். இறுதியில் உதவி ஆசிரியை ச.திலகவதி நன்றி கூறினார்.