தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஹசீனா சையத் ஈரோடு வருகை குறித்து ஆலோசனைக் கூட்டம்.!
ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக வருகிற 03/10/2024 ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் நடைபெறும் ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் சம்பந்தமான நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத் அவர்கள் வருகையை குறித்தும் சிறப்பு விருந்தினராக ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமிகு ஈ வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் வருகை தருவது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி எம். ஞானதீபம் தலைமையில் மண்டலத் தலைவர்களான ஆர் விஜயபாஸ்கர்,எச்.எம். ஜாபர் சாதிக், மாவட்ட துணைத் தலைவர் கே புனிதன் ஆகியோர் முன்னிலையில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி. திருச்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தலைவர்கள் வருகை மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடுகளை குறித்து ஆலோசிக்கப்பட்டது.!!
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத்துறை முன்னாள் துணைத் தலைவர் எம்.ஜவஹர் அலி,மாவட்ட துணைத்தலைவர் சி பாஸ்கர்ராஜ், பொதுச்செயலாளர் இரா கனகராஜன், செயலாளர் மாமரத்து பாளையம் கோபி, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை முன்னாள் துணைத் தலைவர் கே என் பாஷா, ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சித்தோடு பிரபு, ஓ பி சி பிரிவு மாவட்ட தலைவர் சூர்யா சித்திக், என் சி டபுள் யூ சி மாவட்ட தலைவி ஆர் கிருஷ்ணவேணி, நெசவாளர் அணி மாவட்ட தலைவர் சி மாரிமுத்து, மாவட்ட நிர்வாகிகளான பிராமண பெரிய அக்ரஹாரம் முத்து அப்துல் காதர், வள்ளி புரத்தாம்பாளையம் எஸ்.தங்கவேல்,கருங்கல்பாளையம் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.