உயர்கல்வித்துறை அமைச்சராக பதிவியேற்ற பின் முதல் முறையாக திருவாரூருக்கு வருகை தந்த அமைச்சர் கோவி. செழியனுக்கு உற்சாக வரவேற்பு அளித்த திமுக நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் – கலைஞர் கோட்டம் மற்றும் கலைஞர் தாயார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை.
தமிழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர் கோவை செழியன் இன்று திருவாரூர் அருகே உள்ள காட்டூர் கலைஞர் கோட்டத்திற்கு வந்தார் அப்போது திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் திமுக நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் மலர் கொத்துக்கொடுத்து வரவேற்பு அளித்தனர் .
தொடர்ந்து அங்கிருந்த மறைந்த திமுக தலைவர் கலைஞரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்திற்கு சென்று அங்கு அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல் அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த கலைஞரின் திரு உருவப்படம் மற்றும் கலைஞரின் மனசாட்சிய என அழைக்கப்படும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் திருவுருவா படத்திற்கும் மாலை அணிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான கல்யாணசுந்தரம் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்தர், சேகர் என்கிற கலியபெருமாள் நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.