இராஜபாளையம் முடங்கியார் ரோடு பண்ணையார் ஆர்ச் எதிர்புறம் உள்ள பொன்விழா மைதானத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளதை அனைவரும் அறிவர். சமூக விரோதிகள் காந்தியின் இடது கை மணிக்கட்டில் சேதப்படுத்தி உள்ளனர் என்பதை காந்தி ஜெயந்தியான நேற்று தான் பார்த்துள்ளனர்.
ஒரு காலத்தில் பொதுக்கூட்டங்கள், இலக்கிய கூட்டங்கள் இம்மைதானத்தில் நடந்தது.
இப்போது பொருட்காட்சி தான் அவ்வப்பொழுது நிர்வாகத்தினரின் அனுமதியுடன் நடத்தப்படுகிறது.
மற்ற நேரங்களில் மைதானக் கதவு மூடி இருக்கும் . விடுமுறை காலங்களில் கிரிக்கெட் விளையாடுபவர்கள் காம்பௌண்ட் சுவர் ஏறி உள்ளே இறங்கி விளையாடுவார்கள் .சிலர் இரவு நேரங்களில் உற்சாக பானம் அருந்தவும் மற்றும் சமூக விரோத செயல் புரியவும் இம்மைதானத்தை பயன்படுத்தி வருவதாக அதைச் சுற்றியுள்ளவர்கள் கூறுகிறார்கள்.
இனியாவது இதை நிர்வாகம் செய்பவர்கள் சுற்றிலும் காம்பவுண்டு சுவரை எழுப்பி மைதானத்தையும் காந்தி சிலையையும் பாதுகாக்கவும், அடைத்திருக்கும் போது உள்ளே தேவையில்லாதோர் போகாதவாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுகிறோம்.
இராஜபாளையத்தில் ஏகப்பட்ட இலக்கிய அமைப்புகள் உள்ளன, வாய்ப்பு இருப்பின் உங்களது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இலக்கியக் கூட்டங்கள் நடத்தவும், பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தவும், அறிவியல் கண்காட்சிகள் நடத்தவும் அனுமதி வழங்கலாமே.