சாதனை படைத்த மாணவிக்கு கம்பம் எம் எல் ஏ ஊக்க பரிசு
அரபு நாடான துபாயில் நடைபெற்ற ஒலிம்பியாட் அபாகஸ் போட்டியில், கலந்து கொண்ட தேனி மாவட்டம் கோம்பையைச் சேர்ந்த மாணவி ருஷ்ஷந்திகா, போட்டியின் முதல் இரண்டு சுற்றில் முதலிடமும், மூன்றாம் சுற்றில் மூன்றாம் இடமும் பெற்று பதக்கங்களை குவித்து சாதனைகள் படைத்தார். சாதனை படைத்த மாணவியின் ஆர்வத்தையும், முயற்சியையும் பாராட்டி தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் என் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ
ஊக்க பரிசாக ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி மாணவியை மனதார வாழ்த்தினார் உடன் பெற்றோர்கள்